சினிமா

பாடகி ஜானகி உடல்நிலையில் முன்னேற்றம்

Published On 2019-05-07 17:50 IST   |   Update On 2019-05-07 17:50:00 IST
எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜானகியின் உடல்நலம் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் முரளி கிருஷ்ணா பேட்டியளித்துள்ளார். #Janaki
மூத்த பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு விபத்து ஒன்றில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். ஜானகியின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘தனிப்பட்ட காரணங்களுக்காக அம்மாவும் நானும் மைசூருக்கு வந்துள்ளோம். இங்கு தங்கி இருந்த இடத்தில் வீட்டு காம்பவுண்டுக்குள் அம்மா வாக்கிங் சென்றார். வாக்கிங் முடித்த பின்னர் வீட்டுக்குள் நுழைய வாசல்படியில் ஏறும் போது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.



ஆனால் அம்மா குளியல் அறையில் தவறி விழுந்து விட்டதாக செய்திகள் வெளியானது உண்மை இல்லை. உடனடியாக அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தோம்.

ஆபரே‌ஷன் நடந்துள்ள நிலையில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துவந்து விட்டோம். இப்போது அம்மா குணமாகி வருகிறார். சீக்கிரமே எழுந்து நடக்கும் அளவுக்கு அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். வரும் நாள்களில் அம்மாவின் உடல்நிலையை பொறுத்து ஐதராபாத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு திரும்புவோம். அம்மாவின் உடல் நிலைகுறித்து ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டிய தில்லை’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News