சினிமா

நடிகர் மோகன் பாபுவுக்கு 1 வருட சிறை தண்டனையா?

Published On 2019-04-02 21:32 IST   |   Update On 2019-04-02 21:32:00 IST
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு செக் மோசடி வழக்கில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #MohanBabu
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, இவர் தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து 'சலீம்' என்கிற படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஒய்விஎஸ் சௌத்ரி இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஒய்விஎஸ் சௌத்ரி அந்த படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட செக் செல்லுபடி ஆகவில்லை என்றும் மீண்டும் இதுகுறித்து மோகன் பாபுவிடம் கேட்டதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதில், நடிகர் மோகன் பாபுவிற்கு 1 வருட சிறை தண்டனையும், 41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.



இந்நிலையில் இதுகுறித்து மோகன் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், சில தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகள் பரப்புவதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

Similar News