சினிமா

பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே

Published On 2019-02-17 09:38 GMT   |   Update On 2019-02-17 09:38 GMT
தமிழ், இந்தி மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகா ஆப்தே பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #RadhikaApte
ராதிகா ஆப்தேயின் பெற்றோர் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் படித்து அங்கேயே மருத்துவர்களாக பணியாற்றியவர்கள். ராதிகா ஆப்தே பிறந்த பின் அவரது குடும்பம் வேலூரில் இருந்து புனேவுக்கு குடிபெயர்ந்தனர். சிறுவயது முதலே புனேவில் வளர்ந்ததால் அந்த நகரின் தற்போதைய நிலை குறித்து ராதிகா நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். “சாலை விபத்துகள் பற்றி என் அப்பா மூலம் நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் நரம்பியல் நிபுணர். எனவே எனக்கு சாலை விதிகள் குறித்து அதிகமாகத் தெரியும். ஹெல்மெட்டை பயன்படுத்துவது போன்ற அடிப்படையான விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

இதை ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்த முடியாது. அவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். முன்பு இந்த நகரை சைக்கிளிலேயே சுற்றி வருவோம். இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று பாருங்கள். தேவையற்ற நேரங்களில் ஹாரன் ஒலி எழுப்பக்கூடாது, பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன் வேகத்தைக் குறைப்பது, ஹெல்மட் அணிவது போன்ற அடிப்படையான போக்குவரத்து விதிகளைக் கூட மக்கள் பின்பற்றாதது அபாயகரமானது” என்று பேசினார்.



ராதிகாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, “சில படங்களின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறேன். ஆனால் இப்போது நான் அதைப் பற்றி வெளியில் கூறமுடியாது” என்று மறுத்துவிட்டார்.
Tags:    

Similar News