சினிமா

செல்வராகவனின் உதவியாளர் இயக்கிய வாண்டு

Published On 2019-01-30 18:32 IST   |   Update On 2019-01-30 18:32:00 IST
உண்மைச் சம்பத்தை தழுவி செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’வாண்டு’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. #Vaandu #VasanShaji
இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்கி இருக்கும் படம் ’வாண்டு’. இயக்குனர் படம் பற்றி கூறும்போது ’1971 இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்றாலும் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் படமாகவே இருக்கும்.

சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை. வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்து இருக்கிறேன்.



அதே நேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறுவிறு திரைக்கதையுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும்’ என்றார். வரும் பிப்ரவரி 8-ந்தேதி ரீது ஷிவானி இன்போடெயிண்மண்ட் வெளியிடுகிறது. படத்தில் சீனு, ஆல்வின், எஸ்.ஆர்.குணா, ஷிகா, சாய் தீனா, மகா காந்தி, மெட்ராஸ் ரமா, வின்னர் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். #Vaandu #VasanShaji

Tags:    

Similar News