சினிமா

சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்

Published On 2019-01-24 12:59 GMT   |   Update On 2019-01-24 12:59 GMT
சினிமா படங்களின் மூலம் வசூலாகும் தொகையை கணக்கிட்டு சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள், வசூலை பற்றி பேசுவது தேவயில்லாதது என்று கார்த்திக் சுப்புராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார். #Petta #Viswasam #KarthikSubbaraj
பொங்கலுக்கு ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்‘ படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றி படங்கள் என அறிவிக்கப்பட்டாலும் எந்தப் படத்தின் வசூல் அதிகம் என ரசிகர்களிடையே போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் இரண்டு படத்தின் தயாரிப்பு தரப்புமே வசூல் விவரங்களை வைத்து போட்டி போட ஆரம்பித்துவிட்டன.

தற்போது இது குறித்து ‘பேட்ட’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கருத்து தெரிவித்துள்ளார். “எந்த ஓட்டலிலாவது வெளியே இன்று ஆயிரம் இட்லி விற்கப்பட்டது என்று அறிவிப்புப் பலகை வைத்துள் ளார்களா? இல்லையே. உணவு நன்றாக இருக்கிறதா, இல்லையா அது போதும்.



அதே போலத்தான் திரைப்படங்களும். படம் பிடித்திருக்கிறதா இல்லையா, நன்றாக இருக்கிறதா, சென்று பார்ப்போம். இப்படி வசூலை வைத்துப் பேசுவது தேவையில்லாத வணிகமயமாக்கல். இப்படி வசூல் நிலவரங் களை பற்றிப் பேசுவதெல்லாம் சில பேருக்கு தொழில். இப்படியான தகவல்களைப் போட்டு ட்ராக்கர்ஸ் என்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். #Petta #Viswasam #KarthikSubbaraj

Tags:    

Similar News