சினிமா

நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்

Published On 2019-01-23 13:24 IST   |   Update On 2019-01-23 13:24:00 IST
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ரஜினி படத்தை இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக விஜய்யுடன் நான்காவது முறையாக இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Thuppakki2 #Vijay #ARMurugadoss
‘சர்கார்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

முருகதாஸ் தற்போது ரஜினி படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார். ரஜினி படத்தை முடித்த பிறகு முருகதாஸ் மீண்டும் விஜய்யுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை தொடர்ந்து விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவான ‘சர்கார்’ கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. இந்த நிலையில், விழா ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி 2’ படம் கண்டிப்பாக வரும் என்று தெரிவித்தார். இதன்மூலம் நான்காவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைவது உறுதியாகி இருக்கிறது.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Thuppakki2 #Vijay #ARMurugadoss

Tags:    

Similar News