சினிமா

ரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் - அஜித்

Published On 2019-01-14 15:24 IST   |   Update On 2019-01-14 15:24:00 IST
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களுக்காக அதை கண்டிப்பாக பண்ணுவேன் என்று ரோபோ சங்கரிடம் கூறியிருக்கிறார். #Ajith #ThalaAjith
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியானதால் கடும் போட்டி நிலவியது.

தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அஜித் ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடி வரும் வேளையில், ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித்துடன் நடித்த ரோபோ ‌ஷங்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ரசிகர்கள் செய்யும் அனைத்து வி‌ஷயங்களையுமே அஜித் சார் பார்த்து ரொம்பவே சந்தோ‌ஷப்படுகிறார். இவ்வளவு அன்பு வைச்சுருக்காங்க... இதற்கு என்ன பண்ணப் போறேன். இவ்வளவு ஆபரே‌ஷனிலும் நான் எழுந்து நடிக்கிறேன், நடக்கிறேன், ஆடுறேன், பாடுறேன் என்றால் அனைத்துமே அவர்களுடைய ஆசி தான் ரோபோ ஜி என்று ரொம்பவே நெகிழ்ச்சியுடன் சொன்னார். 



இவ்வளவு ரசிகர்களை நான் அடுத்தடுத்த படங்கள் கொடுத்து எப்படி சமாளிக்கப் போறேன் என்றார் அஜித் சார். அதற்கு நீங்கள் வருடத்துக்கு 2 படங்கள் இறக்குங்க. கொண்டாடிக்கிட்டே இருப்பாங்க. 2, 3 வரு‌ஷமெல்லாம் கேப் விடாதீங்க என்றேன். கண்டிப்பா பண்ணனும், ரசிகர்களுக்காகவே பண்ணனும் என்றார்’. இவ்வாறு ரோபோ ‌ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News