சினிமா

அடுத்தடுத்து நயன்தாராவின் 3 படங்கள்

Published On 2018-12-02 13:36 IST   |   Update On 2018-12-02 13:36:00 IST
நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #Nayanthara
‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’.

இப்படத்தை யுவன் சங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது, யுவன் சங்கர் ராஜாவின் நிறுவனத்துக்கு பதிலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

அஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஜனவரி மாதம்தான் ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து, நயன்தாராவின் ‘ஐரா’ படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். #Nayanthara
Tags:    

Similar News