சினிமா

கீமோ தெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு - சோனாலி பிந்த்ரே தகவல்

Published On 2018-11-05 03:25 GMT   |   Update On 2018-11-05 03:25 GMT
புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வரும் சோனாலி பிந்த்ரே, கீமோ தெரபி சிகிச்சையால் தனது கண்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre
காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழில் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சோனாலி பிந்த்ரே. இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.

கடந்த 2002-ல் இயக்குனரும், தயாரிப்பாளருமான கோடி பெல்லை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார். 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் தங்கி அதற்கான சிகிச்சைகளையும் எடுத்து வருகிறார். இதற்காக தலைமுடியை எடுத்து மொட்டை தலையில் இருப்பதுபோன்ற படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அழுதபடி உருக்கமாக பேசிய வீடியோவையும் தலையில் விக் வைத்த படத்தையும் வெளியிட்டார். 

அந்த படத்தின் கீழ், ‘‘நமது தோற்றம் அழகாக இருப்பது முக்கியம். அழகாக இருக்க எல்லோருக்குமே ஆசை இருக்கும். அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியாக இருப்பதற்கான வி‌ஷயங்களை செய்ய வேண்டும். தனது தோற்றம் பற்றிய கர்வம் இருப்பது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது’’ என்று கூறி இருந்தார். 



தற்போது கீமோ தெரபி சிகிச்சையால் தனது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். ‘‘கீமோ தெரபி சிகிச்சையால் எனது கண்களில் வித்தியாசமான அறிகுறைகளை பார்த்தேன். சில நேரம் என்னால் படிக்க முடியாமல் போனது. இதனால் பயந்தேன். இப்போது சரியாகி விட்டது’’ என்று கூறியுள்ளார். #SonaliBendre

Tags:    

Similar News