சினிமா

பாக்யராஜின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சங்க உறுப்பினர்கள் மறுப்பு

Published On 2018-11-02 15:44 IST   |   Update On 2018-11-02 15:44:00 IST
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்க சங்க உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். #Bhagyaraj
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார். சர்கார் பட கதை விவகாரத்தால் மிகவும் மனவேதனை அடைந்ததாக பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாக்யராஜின் ராஜினிமாவை ஏற்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரைப்பட எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்திருப்பதாவது,

பாக்யராஜ் தொடர்ந்து தலைவர் பதவியை வகிக்க வேண்டும், என்று அவரது ராஜினாமாவை சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதால், பாக்யராஜே தலைவர் பதிவியை ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாக்யராஜ் தலைவர் பொறுப்பேற்பது குறித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #Bhagyaraj

Tags:    

Similar News