சினிமா

என் சிக்ஸ்பேக்கை முதலில் பாராட்டியது அஜித்தான் - சூரி

Published On 2018-10-14 13:21 IST   |   Update On 2018-10-14 13:21:00 IST
பிரபல காமெடி நடிகர் சூரி, சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் வைத்து நடித்ததற்கு முதலில் அஜித்தான் பாராட்டினார் என்று கூறியிருக்கிறார். #Soori #Ajith
ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தில் ஆர்கே.சுரேஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். சாந்தினி, தம்பி ராமய்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

கே.சி.பிரபாத் தயாரிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. அஜித் ரசிகராக படத்தில் ஆர்கே.சுரேஷ் தோன்றுவதால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியே அஜித்துக்கான பாராட்டு விழா போல அமைந்தது. நடிகர் சூரி பேசும்போது ‘நான் சிக்ஸ்பேக் வைத்த படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இயக்குனர் சிவா மூலம் என்னை தொடர்புகொண்டு பாராட்டியது அஜித் தான். அவரை என்றுமே மறக்க மாட்டேன்’ என்றார்.



அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் விஸ்வாசம் படம் குறித்து பேசும்போது “ரசிகர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாதமான ரோலில் அஜித் நடித்துள்ளார். குறிப்பாக இரண்டு பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடியுள்ளார் என்றார்.
Tags:    

Similar News