சினிமா

பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா

Published On 2018-10-02 16:29 IST   |   Update On 2018-10-02 16:29:00 IST
எங் மங் சங் என்ற படத்திற்காக நடிகர் பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் நேருக்கு நேர் மோதியிருக்கிறார். #PrabhuDeva #YungMungSung
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்".

இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.



படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.
Tags:    

Similar News