சினிமா

கூர்காவாக களமிறங்கும் யோகி பாபு

Published On 2018-09-16 10:55 IST   |   Update On 2018-09-16 10:55:00 IST
பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் யோகி பாபு, தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் கூர்காவாக நடிக்க இருக்கிறார். #YogiBabu
யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாகத் திகழ்ந்து வருகிறார். விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, ‘100% காதல்’, ‘குப்பத்து ராஜா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்கள் இவர் கைவசம் உள்ளன.

இந்நிலையில் யோகி பாபு ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்றும் செய்தி வந்தது. ஆனால், அதில் யோகி பாபு ஹீரோ இல்லை. படம் முழுவதும் வரும் கதாபாத்திரம் என்று கூறியிருந்தார்.



தற்போது அந்த படத்திற்கு ‘கூர்கா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் கூர்கா வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் இவருடன் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. #YogiBabu
Tags:    

Similar News