சினிமா

கட், மியூட், காட்சி மாற்றம் - விஸ்வரூபம் 2 படத்தின் 22 இடங்களில் கை வைத்த சென்சார் போர்டு

Published On 2018-08-08 16:53 GMT   |   Update On 2018-08-08 16:53 GMT
கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் 22 இடங்களில் சென்சார் போர்டு கட், மியூட், காட்சி மாற்றம் ஆகிய இடங்களில் கை வைத்துள்ளது. #Vishwaroopam2
கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் புரோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் `சாதி மதம்' என்ற மூன்றாவது சிங்கிளின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார்கள். இந்த வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு அளித்த கட், மியூட், காட்சி மாற்றம் ஆகியவற்றின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மொத்தம் 22 இடங்களில் சென்சார் போர்டு குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Vishwaroopam2 #KamalHaasan
Tags:    

Similar News