சினிமா

சித்தார்த்துக்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்

Published On 2018-07-03 15:11 IST   |   Update On 2018-07-03 15:11:00 IST
சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் வேதாளம் படத்தில் நடிக்க அஜித்துக்கு வில்லனாக நடித்த கபிர் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Siddharth #KabirDuhanSingh
`சைத்தான் கா பச்சா' படத்தை தொடர்ந்து சித்தார்த் அடுத்ததாக புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூலை 13-ஆம் தேதி துவங்குகிறது. 

இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் தெரசாவும், முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கின்றனர். இந்த படத்தில் சித்தார்த்துக்கு வில்லனாக வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இவர் விஜய் சேதுபதியின் றெக்க படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Siddharth #KabirDuhanSingh

Tags:    

Similar News