சினிமா

தமிழ்படம் 2.0 குத்துப்பாட்டு குறித்து மனம் திறந்த கஸ்தூரி

Published On 2018-06-08 13:57 IST   |   Update On 2018-06-08 13:57:00 IST
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு தமிழ்படம் 2.0 படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு ஆடியிருக்கும் கஸ்தூரி, இந்த படத்தில் இடம்பெற்றது பற்றி பேசினார். #TP2Point0 #TamizhPadam2
நல்ல தலைவனை தேடிக் கொண்டிருக்கிறேன் ஒரு பக்கம் அரசியலில் அதிரடி கருத்துகள், இன்னொரு பக்கம் சினிமாவில் கவர்ச்சி அவதாரம் என்று பரபரப்பாக இருக்கும் கஸ்தூரியுடன் பேசும் போது, 

தமிழ்படம்-2 படத்தில் டான்ஸ் ஆடிய அனுபவம்?

அந்த படத்துக்கு பூஜை போட்ட உடனேயே எடுத்தது என்னுடைய பாடல் தான். பாடல் முழுக்க 3 சேலைகள் தான் எனக்கு காஸ்ட்யூம். ஆனால் செம கவர்ச்சியாக இருக்கும். முதல் பாகத்தில் நான் ஆடியதால் ஆஸ்திரேலியாவில் இருந்த என்னை அழைத்து செண்டிமெண்ட் ஆக ஆடவைத்து இருக்கிறார் சி.எஸ்.அமுதன்.

அதிரடியாக பல வி‌ஷயங்கள் பேசுகிறீர்களே... இந்த துணிச்சல் எப்படி வந்தது?

மரணத்தையே மூன்று முறை கூப்பிடும் தூரத்தில் சந்தித்துவிட்டேன். எனவே எனக்கு பயம் இல்லை.

மகனுக்கு என்னை பற்றி கேட்டால் அம்மா என்று சொல்வான். அவ்வளவுதான் அவனுக்கு தெரியும். என் கணவர் உயிரை காப்பாற்றும் மருத்துவராக இருக்கிறார். அவர் இதைபற்றி கண்டுகொள்ளவே மாட்டார். வீட்டில் அமெரிக்க கலாசாரத்தை கொண்டவர்கள். அவர்கள் தனி மனித சுதந்திரத்தை பெரிதும் மதிப்பவர்கள்.



உங்களை வைத்து அமைதிப்படை 3 எடுக்கலாமா?

கொஞ்சம் பொறுங்கள். அமைதிப்படை சத்யராஜ் வேடத்துக்கு நிகரான ஒரு வேடத்தில் அக்கினி என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் நான் வில்லி அரசியல்வாதி.

அரசியலில் இப்போது நான் ஒரு பார்வையாளராக, விமர்சகியாக இருக்கிறேன். நான் எதிர்பார்த்த மாற்றத்தை தருபவர் இன்னும் அகப்படவில்லை. அப்படி ஒரு நல்லவர் கிடைத்தால் நிச்சயம் வருவேன். இரட்டை வேடம் போடாமல் மனசாட்சிபடி நடப்பவரை தான் நான் தலைவராக ஏற்றுக்கொள்வேன்.

நடிகர் ரஜினிக்கு நான் தீவிர விசிறி. ஆனால் அரசியலில் அவரது கொள்கைகளும், பேச்சுகளும் ஏற்புடையதாக இல்லை.

திருமணத்துக்கு பின் நடிக்க வந்தாலும் பாடல், கவர்ச்சி வேடங்கள் என்று கலக்குகிறீர்கள்?

கதாநாயகர்களை பார்த்து நீங்கள் இப்படி கேட்பதில்லை. ஆனா நடிகைகள் என்றால் மட்டும் திருமணமானாலே அக்கா, அண்ணியாக நடிக்க வேண்டுமா? என்னுடைய அழகையும், உடல் கட்டுக்கோப்பையும் வைத்து தான் இந்த மாதிரி வேடங்கள் வருகின்றன. எனக்கு இதில் சந்தோ‌ஷம் தான். #TP2Point0 #TamizhPadam2 #Kasthuri
Tags:    

Similar News