சினிமா

நானும் பாலியல் தொல்லையை சந்தித்தேன் - ரஜினி பட நாயகி பேட்டி

Published On 2018-05-12 12:51 GMT   |   Update On 2018-05-12 12:58 GMT
ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படத்தில் நடித்துள்ள நாயகிகளுள் ஒருவரான ஹூமா குரேஷி, அவரும் பாலியல் தொல்லையை சந்தித்ததாக கூறியிருக்கிறார். #HumaQureshi
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `காலா'. மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷியும் நடித்திருக்கிறார். 

பிரான்சில் நடந்து வரும் 71-வது கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு நடிகை ஹூமா குரேஷி பெண்களுக்கு பாலியல் தொல்லை பற்றிய #MeToo இயக்கம், கருத்து சுதந்திரம், இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி அவரது சொந்த அனுபவங்களை பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"இந்தியாவிலும், உலகின் பல இடங்களிலும், பெண்கள் துன்புறுத்துதலுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு எதிரான அமைப்புகளும் தற்போது உருவாகிவிட்டது. இந்தியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபடுகின்றனர். 



ஒரு பெண் சத்தமாக கத்துகிறாள் என்றால், அவள் உதவியை கேட்கிறாள் என்று அர்த்தம். அதற்காக அவளை தவறாக சித்தரிப்பது தவறானது, அவளுக்கு உதவவே, அவளை காப்பாற்றவே நாம் முன்வர வேண்டும். நமது நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியான சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன. இதற்கு சட்டங்கள் மட்டும் உதவ முடியாது, நாம் நேரிடையாக களத்தில் இறங்க வேண்டும். மாற்றம் ஆழ்ந்ததாகவும், தன்னார்வமாகவும் இருக்க வேண்டும். 

பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறையிலும் உள்ளது. நானும் அதை சந்தித்து உள்ளேன் என்று கூறினார். #HumaQureshi #Cannes71 #Cannes2018

Tags:    

Similar News