சினிமா

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 10-ந்தேதி கமல்ஹாசன் சிறப்புரை

Published On 2018-02-02 06:09 GMT   |   Update On 2018-02-02 06:09 GMT
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் 10-ந்தேதி சிறப்புரை நிகழ்த்துகிறார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வருகிற 10-ந்தேதி வருடாந்திர இந்திய கருத்தரங்கு நடக்கிறது. இதில் சிறப்புரையாற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதை ஏற்று அமெரிக்கா செல்லும் அவர், ‘தமிழ்நாடு’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘ஹார்வர்டு பல்கலைக்கழகம் எனக்கு கொடுத்துள்ள தலைப்பு தமிழ்நாடு. இது குறித்து பேச வெளிப்படையான தேவை இருப்பதால் இதை தேர்வு செய்தேன். எங்கள் மாநிலம் ஆழத்தில் மூழ்கி உள்ளது. ஒரு மனிதனாகவும், ஒரு தமிழனாவும் எனது கண்ணியத்தை இது பாதிக்கிறது’ என்றார்.



அவர் மேலும் கூறும்போது, ‘எனது மாநிலம் அதற்குரிய உச்சத்தை அடைய வேண்டும் என ஏங்குகிறேன். எனது மாநிலத்தின் எழுச்சி, எனது நாட்டின் எழுச்சியை எடுத்துரைக்கும். நமது நாலந்தா பல்கலைக்கழகம் போல ஹார்வர்டும் ஒரு கற்றல் தொகுப்பு ஆகும். நாலந்தாவின் பாரம்பரியத்தை எவ்வித சேதமும் இல்லாமல் நாம் தொடர்ந்து இருந்தால், இதுபோன்ற கருத்தரங்குகளை 200 ஆண்டுகளுக்கு முன்பே நாம் நடத்தியிருக்கலாம். இத்தகைய தளங்கள் முக்கியமானதும், தவிர்க்க முடியாததும் ஆகும்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டும் ‘பேச்சு சுதந்திரம்’ என்ற தலைப்பில் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News