சினிமா

இன்று தனது அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்தார் சுசீந்திரன்

Published On 2018-01-29 17:24 IST   |   Update On 2018-01-29 17:24:00 IST
தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வரும் சுசீந்திரன் அவரது அடுத்த அத்தியாயத்தை இன்று துவங்கியிருக்கிறார்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’.

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தில், இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிக்கின்றனர். 

குற்றச்சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் விக்ராந்த்தும், சுசீந்திரனும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது, ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கிறார். 



த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. இதன் மூலம் இயக்குநர் சுசீந்திரன் முதல்முறையாக நடிகராக அவதாரம் எடுக்கிறார். இதுகுறித்து மகிழ்ச்சியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், இன்று என்னால் மறக்க முடியாத நாள். கடந்த 2009 ஜனவரி 29-ல் தான் `வெண்ணிலா குழு' படத்தை ரிலீஸ் செய்தோம். இன்று அதேநாளில் நான் நடிகராக அறிமுகமாகும் `சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். 

Similar News