சினிமா

`மெர்சல்' படம் குறித்த பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

Published On 2017-08-31 14:29 IST   |   Update On 2017-08-31 14:29:00 IST
`மெர்சல்' படம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ``மெர்சல்''.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அவ்வப்போது புதுப்புது தகவல்களை `மெர்சல்' படக்குழு வெளியிட்டு வருகிறது.



இந்நிலையில், `மெர்சல்' படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை அபிராமி ராமநாதன் கைப்பற்றியிருப்பதாக ஒரு செய்தி பரவி வந்தது. இதற்கு மறப்பு தெரிவிக்கும் விதமாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளரான அதிதி ரவீந்திரனாத் இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், `மெர்சல்' படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினமே இருப்பதாக கூறியிருக்கிறார்.

Similar News