சினிமா

தாடி பாலாஜி மீது மனைவி போலீசில் புகார்

Published On 2017-05-23 08:18 IST   |   Update On 2017-05-23 08:18:00 IST
சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை மாதவரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 43). நகைச்சுவை நடிகரான இவர் டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (30). இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.

பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நித்யா மாதவரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கணவர் (பாலாஜி) தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இதுபற்றி மாதவரம் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News