சினிமா
சமந்தாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம்
நடிகை சமந்தா திருமணத்தை ஆகஸ்டு மாதத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக படங்களில் நடிப்பதை அவர் குறைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகசைதன்யாவின் தம்பியும் நடிகருமான அகில் ஆந்திராவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஸ்ரேயா என்பவரை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் மே மாதம் நடக்க உள்ளது.
இந்த திருமணம் முடிந்ததும் சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் இவர்கள் திருமணத்தை நடத்த உறவினர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்துக்கான நகைகள், உடைகள் வாங்கும் பணிகளில் சமந்தா இப்போதே ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாகசைதன்யா இந்து. சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.
எனவே இந்து முறைப்படி ஐதராபாத்திலும் கிறிஸ்தவ முறைப்படி சென்னையிலும் திருமணத்தை நடத்த ஆலோசித்து வருகின்றனர். திருமணத்துக்காக சமந்தா புதிய படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 3 படங்கள் உள்ளன. விஷால் ஜோடியாக இரும்புத்திரை என்ற படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த படங்களை திருமணத்துக்கு முன்பு முடித்து கொடுத்து விட திட்டமிட்டு உள்ளார். வேறு புதிய படங்களில் நடிக்க அவர் மறுத்து வருகிறார். நாக சைதன்யா கூறும்போது “சமந்தா திருமணத்துக்கு பிறகு நடிப்பதில் ஆட்சேபனை இல்லை. நடிக்க விரும்பினால் அவர் தொடர்ந்து நடிக்கலாம்” என்றார்.