சினிமா

மகள்கள், பேரன், மருமகனுடன் தீபாவளியை கொண்டாடிய ரஜினி

Published On 2016-10-30 10:34 IST   |   Update On 2016-10-30 10:34:00 IST
ரஜினி இந்த தீபாவளி திருநாளை மகள்கள், பேரன், மருமகனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
தீபாவளி திருநாளை நேற்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையுலக பிரபலங்களும் தீபாவளி திருநாளை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினி, தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு சென்னை திரும்பினார்.

நேற்று தீபாவளி தினத்தன்று தனது மருமகன் தனுஷ், மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் பேரன் பேத்திகள் அனைவரையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் சந்தோஷமாக கொண்டாடியுள்ளார். பேரன், பேத்தி, மகள்கள், மருமகனுடன் மத்தாப்பு கொளுத்தியும் தீபாவளி திருநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.


அதேபோல், கமல் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இந்த தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளார். இதேபோல், மற்ற திரையுலக பிரபலங்களும் தங்களது குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

Similar News