சினிமா

சிரஞ்சீவி படத்தில் குத்தாட்டம் போடும் கேத்ரின் தெரசா

Published On 2016-05-22 19:44 IST   |   Update On 2016-05-22 19:44:00 IST
சிரஞ்சீவி நடிக்க இருக்கும் 150வது படத்தில் கேத்ரின் தெரசா ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி தன்னுடைய 150வது படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். விநாயக் இயக்கவுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெறும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. கேத்ரின் தெரசா தமிழில் ‘மெட்ராஸ்’, ‘கதகளி’, ‘கணிதன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்தேஜா தயாரிக்கவுள்ளார். ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Similar News