சினிமா

மகளுக்காக அர்ஜூன் எடுத்த பெரிய முயற்சி

Published On 2016-05-22 18:36 IST   |   Update On 2016-05-22 18:36:00 IST
ஐஸ்வர்யா அர்ஜூன் நடிக்கும் புதிய படத்திற்காக, அர்ஜூன் பெரிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று பெயர் பெற்றவர் அர்ஜூன். இவருடைய மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் ‘பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதில் இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ஓடவில்லை.

இதன்பின் படத்தில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா அர்ஜூன், தற்போது ‘காதலின் பொன் வீதியில்’ புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக சாந்தன் என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். இந்த படத்தை அர்ஜூன் தயாரிக்கிறார். மேலும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார்.

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கியுள்ள படக்குழுவினர், தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்க இருக்கிறார்கள். இந்த படம் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News