சினிமா

போலீசில் புகார் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்

Published On 2016-05-15 19:53 IST   |   Update On 2016-05-15 19:53:00 IST
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் பென்சில் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் போலீசில் புகார் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘பென்சில்’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். மணிநாகராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் பல பிரச்சனைகளை கடந்து ஒரு வழியாக வெள்ளியன்று வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படம் வெளியான ஒருசில மணி நேரங்களில் ஒரு இணையதளத்தில் படம் வெளியாகியிருக்கிறது. இதை அறிந்த தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் சென்னை காவல் துறையினர்களிடம் ஜி.வி.பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் புகார் கொடுத்துள்ளார்கள்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, ‘எங்கள் நிறுவனம் தயாரித்து ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று (13.05.2016) வெளியான 'பென்சில்' திரைப்படத்தின் திருட்டு விசிடி இன்று (14.05.2016) இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தயவு கூர்ந்து இதை தடுக்க தக்க ஆவணம் செய்யுமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். www.tamilrockers.co என்ற இணையதளத்தில் எங்கள் படம் வெளியாகியுள்ளது’. இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News