இது புதுசு

விரைவில் இந்தியா வரும் டாடா டியாகோ EV

Published On 2022-09-24 10:05 GMT   |   Update On 2022-09-24 10:05 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ EV இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • புதிய டாடா எலெக்ட்ரிக் கார் கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டாடா டியாகோ EV மாடல் செப்டம்பர் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஹேச்பேக் மாடலில் முதல் முறை வழங்கப்படும் அம்சங்கள் டியாகோவில் வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இதில் Z-கனெக்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சார்ந்த ரிமோட் அம்சங்களை இயக்க முடியும்.

புதிய டியாகோ EV மாடலில் ரிஜெனரேஷன் மோட்கள் வழங்கப்பட உள்ளது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் டாடா டிகோர் EV மாடலில் CCS2 சார்ஜிங் மற்றும் 25 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதே சார்ஜிங் வசதி புதிய டியாகோ EV மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

பவர்டிரெயினை பொருத்தவரை டியாகோ EV மாடலில் டிகோர் EV காரில் வழங்கப்பட்ட 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 26 கிலோவாட் ஹவர் லிக்விட் கூல்டு பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News