இது புதுசு

விரைவில் இந்தியா வரும் டாடா டியாகோ புது வேரியண்ட் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Update: 2022-08-01 09:57 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார் மற்றும் வேரியண்ட்களை அறிமுகம் செய்து வருகிறது.
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் ஹேச்பேக் மாடலாக டியாகோ இருக்கிறது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேச்பேக் மூலம் இந்திய சந்தையில் ரி-எண்ட்ரி கொடுத்தது. இந்த கார் தொடர் அப்டேட் மற்றும் குறைந்த விலை போன்ற காரணங்களால் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் NRG மாடல்களுக்கு அதிக அம்சங்களை வழங்க இருக்கிறது.

இரு கார்களின் XT வேரியண்டில் டாடா மோட்டார்ஸ் ஓட்டுனர் இருக்கையில் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, 14 இன்ச் ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், ரியர் பார்சல் ஷெல்ஃப், வேணிட்டி மிரர், பிளாக்டு-அவுட் பி-பில்லர் போன்ற வசதிகளை வழங்க முடிவு செய்து இருக்கிறது. டியாகோ மாடலின் XT வேரியண்டில் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது. NRG மாடலில் புதிதாக XT வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேடெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது.

இதே என்ஜின் பெட்ரோல்-CNG வடிவிலும் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 72 ஹெச்.பி. பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டியாகோ மாடல் 1.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைத்தது. எனினும், டீசல் என்ஜின் வேரியண்ட் அதிக வரவேற்பு இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டு விட்டது. டாடா டியாகோ மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 39 ஆயிரம் முதல் துவங்குகிறது.

டாடா டியாகோ மாடல் XE, XT, XT (O), XZ மற்றும் XZ+ போன்ற வேரியண்ட்களிலும், டாடா NRG மாடல் XZ+ எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. 

Tags:    

Similar News