இது புதுசு

டாடா பன்ச் ஸ்பெஷல் எடிஷன் டீசர் வெளியீடு

Update: 2022-09-21 11:47 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் மைக்ரோ எஸ்யுவி மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புதிய டாடா பன்ச் மாடல் கேமோ கிரீன் நிற பெயிண்ட் கொண்டிருக்கும் என டீசர்களில் தெரியவந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எஸ்யுவி மாடல்களின் ஜெட் எடிஷனை சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது டாடா பன்ச் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் கேமோ எடிஷன் என அழைக்கப்படும் என தெரிகிறது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் கேமோ பேட்ஜ்கள், கேமோ கிரீன் வெளிப்புற பெயிண்ட், ORVM-கள், அலாய் வீல், ரூப் உள்ளிட்டவைகளில் கிளாஸ் பிளாக் அக்செண்ட் செய்யப்பட்டு உள்ளது. உள்புறம் காண்டிராஸ்ட் நிற இன்சர்ட், லெதர் இருக்கை மேற்கவர்களில் புதிய தீம் செய்யப்பட்டு இருக்கிறது.

 இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய கேமோ எடிஷன் மாடல்: 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

தற்போது டாடா பன்ச் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 93 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடல் நாளை (செப்டம்பர் 22) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News