இது புதுசு

இந்தியாவில் மூன்று எலெக்ட்ரிக் கார்கள் - டாடா மோட்டார்ஸ் அசத்தல் திட்டம்?

Published On 2022-09-16 11:01 GMT   |   Update On 2022-09-16 11:01 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய டியாகோ எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், தனது தற்போதைய கார் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா ஹேரியர் மிட்-சைஸ் எஸ்யுவி மற்றும் பன்ச் மைக்ரோ எஸ்யுவி உள்ளிட்டவை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று டாடா பன்ச் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 2025 வாக்கில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது.


புதிய ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோ என இதுவரை எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வு நடைபெற இருப்பதை அடுத்து ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். டாடா ஹேரியர் எலெக்ட்ரிக் மாடல் விலை இந்தியாவில் ரூ. 20 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும்.

டாடா டிகோர் மற்றும் நெக்சான் எலெக்ட்ரிக் மாடல்களின் இடையில் பன்ச் எலெக்ட்ரிக் மாடல் நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. வழக்கமான பெட்ரோல் கார் மாடல்களை விட எலெக்ட்ரிக் கார் விலை 30 முதல் 40 சதவீதம் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது டாடா பன்ச் மாடல் பெட்ரோல் வடிவில் மட்டுமே கிடைக்கிறது. ஹேரியர் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Photo Courtesy: Cartoq

Tags:    

Similar News