இது புதுசு

அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஹண்டர் 350 - ராயல் என்பீல்டு அதிரடி

Update: 2022-08-05 10:03 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹண்டர் 350 மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது.
  • இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 மாடல் வெளியீடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரான சித்தார்த்தா லால் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 விவரங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

இவர் வெளியிட்டு இருக்கும் யூனிட் டாப் எண்ட் மாடல் ஆகும். இது மெட்ரோ ரிபெல் என அழைக்கப்படுகிறது. டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கும் ஹண்டர் 350 இந்திய சந்தையில் குறைந்த விலை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


இந்தியாவில் புதிய ஹண்டர் 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபெல் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் அவர்கள் விரும்பும் உபகரணங்கள் அடங்கிய மோட்டார்சைக்கிள் வேரியண்டை தேர்வு செய்து கொள்ள முடியும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 19.94 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் மொத்தத்தில் எட்டு விதமான நிறங்களில் கிடைக்கும்.

Tags:    

Similar News