இது புதுசு

அசத்தல் அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகமான புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட்

Published On 2022-06-16 09:40 GMT   |   Update On 2022-06-16 09:40 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • மேலும் இந்த கார் மொத்தத்தில் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 53 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்திய வெளியீட்டுக்கு முன் புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விற்பனைகம் வந்தடைந்தது. புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.


இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், iMT யூனிட் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. 2022 ஹூண்டாய் வென்யூ மாடலில் புதிய கிரில், டார்க் குரோம் ஃபினிஷ், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ரிடிசைன் செய்யப்பட்டு உள்ளன.

இத்துடன் புதிய அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள், எல்.இ.டி. லைட் பார், இண்டகிரேடெட் ஸ்பாயிலர் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிரைவ் மோட்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

இந்திய சந்தையில் 2022 ஹூண்டாய் வென்யூ மாடல் கியா சொனெட், டொயோட்டா அர்பன் குரூயிசர், டாடா நெக்சான், மஹிந்திரா XUV300 மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News