இது புதுசு

இந்தியாவில் அறிமுகமாகும் புது பென்ஸ் கார் - முன்பதிவு துவக்கம்

Update: 2022-09-20 10:15 GMT
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS 580 எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் பூனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது EQS 580 4மேடிக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு கட்டணம் ரூ. 25 லட்சம் ஆகும். கடந்த மாதம் இதே காரின் AMG வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது EQS 580 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடல் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடலில் 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 516 ஹெச்பி பவர், 885 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

அளவில் இந்த கார் 5216எம்எம் நீளமாகவும், 1926 எம்எம் அகலம், 1512 எம்எம் உயரமாக இருக்கிறது. இதில் மொத்தம் மூன்று டிஸ்ப்ளே ஸ்கிரீன்கள், ஆக்டிவ் ஆம்பியன்ட் லைட்டிங், பானரோமிக் சன்ரூப் வழங்கப்படுகிறது. இத்துடன் லெதர் இருக்கை கவர்கள், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் உள்ளது.

Tags:    

Similar News