இது புதுசு

வேற லெவல் அப்டேட்டகளுடன் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் அறிமுகம்

Update: 2022-08-13 10:46 GMT
  • மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது.
  • இந்த காரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் ஸ்கார்பியோ N காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. முற்றிலும் புது தோற்றம் கொண்ட ஸ்கார்பியோ N காருடன் விற்பனை செய்ய ஏதுவாக ஸ்கார்பியோ கிளாசிக் காரை மஹிந்திரா தற்போது அறிவித்து இருக்கிறது.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் கிளாசிக் S மற்றும் கிளாசிக் S11 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் முற்றிலும் புது முகம் பெற்று இருக்கிறது.

ரி-டிசைன் செய்யப்பட்ட கிரில் நடுவே மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்-கள் உள்ளன.


இந்த காரில் ரி-டிசைன்டு 17 இன்ச் அலாய் வீல்கள், டூயல் டோன் லுக் அழகாக காட்சியளிக்கின்றன. பின்புறம் டவர் எல்இடி டெயில் லேம்ப்-கள் நீண்ட இடைவெளிக்குப் பின் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டு கதவுகளில் கிளாசிக் பேட்ஜ் உள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை ஜென் 2 எம் ஹாக் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 128 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் பெட்ரோல் என்ஜின், ஆட்டோ அல்லது 4x4 வெர்ஷன் வழங்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், 2 ஏர்பேக் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சமாக உள்ளது.

Tags:    

Similar News