இது புதுசு

மஹிந்திரா BE.07 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்

Published On 2022-08-16 06:06 GMT   |   Update On 2022-08-16 06:06 GMT
  • மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது எலெக்ட்ரிக் கார் விவரங்களை அறிவித்து இருக்கிறது.
  • மேலும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்-ஐ வெளியிட்டு உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை XUV மற்றும் BE பிராண்டிங்கில் விற்பனை செய்யப்பட உள்ளன. 2024 முதல் 2026-க்குள் ஐந்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. தற்போது அறிமுகமாகி இருக்கும் BE.07 கான்செப்ட் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார் ஆகும்.

மற்ற எலெக்ட்ரிக் எஸ்யுவி-க்களை போன்றே இந்த மாடலும் INGLO பிளாட்பார்மில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த பிளாட்பார்ம் கொண்டு வெவ்வேறு பாடி ஸ்டைல்களில் வாகனங்களை உருவாக்க முடியும். மேலும் இது 60 கிலோவாட் ஹவர் முதல் 80 கிலோவாட் ஹவர் வரையிலான பேட்டரிகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது.


இத்துடன் 175 கிலோவாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை சப்போர்ட் செய்யும். இதை கொண்டு பேட்டரியை 35 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம். புதிய மஹிந்திரா BE.07 சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளன. இந்த கார் 4.565 மில்லிமீட்டர் நீளம், 1900 மில்லிமீட்டர் அகலம், 1600 மில்லிமீட்டர் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2ஸ775 மில்லிமீட்டர்கள் ஆகும்.

மற்ற எஸ்யுவி மாடல்களை போன்று இல்லாமல், BE.07 மாடலில் உடயரமான ஸ்டான்ஸ், பிளாட் ரூப்லைன், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், நீண்ட செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டெயில் லேம்ப்க்லள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ரோடக்‌ஷன் மாடல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலை விட கணிசமான மாற்றங்களை கொண்டிருக்கும்.

இந்த எலெக்ட்ரிக் கார் கேபினில் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேக்கள், 12.3 இன்ச் அளவில் மூன்று ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப், ஓடிஏ அப்டேட்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மஹிந்திரா BE.07 மாடல் 2026 அக்டோபர் மாத வாக்கில் அறஇமுகம் செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News