கார்
null

புது அம்சங்களுடன் அறிமுகமான லெக்சஸ் ES300h

Published On 2022-10-12 09:47 GMT   |   Update On 2022-10-12 10:15 GMT
  • லெக்சஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ES300h மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
  • முன்னதாக 2020 வாக்கில் லெக்சஸ் ES சீரிஸ் இந்தியாவில் முதன் முதலில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

லெக்சஸ் இந்தியா நிறுவனம் மேட்-இன்-இந்தியா ES300h மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லெக்சஸ் ES300h விலை ரூ. 59 லட்சத்து 71 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2020 ஆண்டு லெக்சஸ் நிறுவனம் ES சீரிஸ் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. அந்த வகையில் புதிய ES300h லெக்சஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யும் நான்கவாது மாடலாக அமைந்துள்ளது.

மேட்-இன்-இந்தியா லெக்சஸ் ES300h மாடல்- எக்ஸ்குசிட் மற்றும் லக்சரி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. புது மாடலில் அதநவீன டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, குரல் மூலம் அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ES மாடலின் செண்டர் கன்சோல் ரி-டிசைன் செய்யப்பட்டு கூடுதலாக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய லெக்சஸ் ES300h மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 88 கிலோவாட், 202 நியூட்டன் மீட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 175 ஹெச்பி பவர், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. என்ஜின் மற்றும் ஹைப்ரிட் சிஸ்டம் இணைந்து 215 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய லெக்சஸ் ES300h லக்சரி வேரியண்ட் விலை ரூ. 65 லட்சத்து 81 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பேஸ் வேரியண்டை விட ரூ. 6 லட்சம் வரை விலை அதிகம் ஆகும்.

Tags:    

Similar News