இது புதுசு

விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் டக்சன்

Update: 2022-06-24 10:45 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் மாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • இந்தியாவில் இது நான்காம் தலைமுறை டக்சன் மாடல் ஆகும்.

ஹூண்டாய் நிறுவனம் 2022 ஹூண்டாய் டக்சன் எஸ்.யு.வி. மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. புதிய ஹூண்டாய் டக்சன் எஸ்.யு.வி. மாடல் ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. எஸ்.யு.வி. மாடல்களுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், புதிய டக்சன் அமோக வரவேற்பு பெறும் என ஹூண்டாய் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

சர்வதேச சந்தையில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டதகு. இதன் வடிவமைப்பு மற்றும் டிசைன் மூலம் இந்த மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவிலும் இந்த மாடல் சோதனை செய்யப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளது.


புதிய மாடலின் வெளிப்புறம் முற்றிலும் புது எக்ஸ்டீரியர் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் புதிய 3D முன்புற கிரில், முன்புற பம்ப்பரில் செங்குத்தான எல்.இ.டி. ஹெட்லைட்கள் உள்ளன. இதன் முன்புற பம்ப்பரில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் உள்ளன. இவை காருக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகின்றன.

2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 154 ஹெச்.பி. பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் என்ஜின் 184 ஹெச்.பி. பவர், 417 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Tags:    

Similar News