இது புதுசு

விரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் - அசத்தல் டீசர்கள் வெளியீடு!

Published On 2022-06-29 06:09 GMT   |   Update On 2022-06-29 06:09 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருகிறது.
  • இந்த கார் பற்றிய விவரங்கள் டீசர்கள் வடிவில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. டீசர்களிலே ஐயோனிக் 6 மாடலின் பல்வேறு விவரங்கள் அம்பலமாகி வருகின்றன.

புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் நிறுவனத்தின் பெர்செப்ட் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய டீசர்களின் படி ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலில் பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. ஐயோனிக் 6 மாடல் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் வழக்கமான இண்டர்னல் கம்பஷன் மாடல்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.


அதன்படி ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலில் மிக மெல்லிய ஹெட்லேம்ப்கள், பாராமெட்ரிக் பிக்சல் எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் உள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய இண்டர்னல் கம்பஷன் மாடல்களின் பக்கவாட்டில் இடம்பெற்று இருக்கும் கிரீஸ், கட்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இந்த காரில் கேமரா சார்ந்து இயங்கும் விங் மிரர்கள் உள்ளன.

புதிய ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடல் ஹூண்டாய் பர்பஸ் பில்ட் e-GMP பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் இரண்டாவது மாடல் ஆகும். முன்னதாக ஐயோனிக் 5 இந்த பிளாட்பார்ம் கொண்ட முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஐயோனிக் 6 மாடல் சர்வதேச சந்தையில் சிங்கில் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் பவர்-டிரெயின்களில் கிடைக்கும்.

Tags:    

Similar News