இது புதுசு

விற்பனையகம் வந்தடைந்த 2022 ஹூண்டாய் வென்யூ

Update: 2022-06-15 11:37 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்பட்ட வென்யூ மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
  • வெளியீட்டுக்கு முன் இந்த மாடல் விற்பனையகம் வந்தடைந்தது.

ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்பட்ட பேஸ்லிப்ட் வென்யூ மாடல் விற்பனையகம் வரத் துவங்கி இருக்கிறது. புதிய 2022 ஹூண்டாய் வென்யூ மாடல் நாளை (ஜூன் 16) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர 2022 வென்யூ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஹூண்டாய் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. புதிய ஹூண்டாய் வென்யூ மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விற்பனையகம் வந்துள்ள புதிய ஹூண்டாய் வென்யூ மாடல் பேஸ் வேரியண்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த மாடலில் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் வெள்ளை நிற எக்ஸ்டீரியர் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக 2022 ஹூண்டாய் வென்யூ மாடல் டைட்டன் கிரே நிற மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

2022 ஹூண்டாய் வென்யூ எஸ்.யு.வி. மாடல் ஏழு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த மாடல் டைஃபூன் சில்வர், டைட்டன் கிரே, போலார் வைட், ஃபேண்டம் பிளாக், டெனிம் புளூ, ஃபியரி ரெட் மற்றும் ஃபியரி ரெட் (டூயல்-டோன்) நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News