ஆட்டோமொபைல்
எம்ஜி ஆஸ்டர்

எம்ஜி ஆஸ்டர் வினியோக திட்டத்தில் திடீர் மாற்றம்

Published On 2021-11-22 08:28 GMT   |   Update On 2021-11-22 08:28 GMT
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் வினியோக திட்டத்தில் மாற்றம் செய்து இருக்கிறது.


எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை அக்டோபர் 11 ஆம் தேதி அறிவித்தது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 21 ஆம் தேதி துவங்கியது. இந்த காரில் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சர்வதேச சந்தையில் நிலவும் சிப் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக எம்ஜி ஆஸ்டர் வினியோகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என எம்ஜி மோட்டார் இந்தியா மூத்த அதிகாரி கவுரவ் குப்தா தெரிவித்தார். 



இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் ஸ்டைல் மற்றும் சூப்பர் வேரியண்ட்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. புதிய ஆஸ்டர் மாடல் வினியோகம் பற்றிய அப்டேட்களை மை எம்ஜி ஆப் அல்லது அருகாமையில் உள்ள விற்பனை மையங்களில் அறிந்து கொள்ளலாம். 

எம்ஜி மோட்டார் நிறுவனம் முதற்கட்டமாக 5 ஆயிரம் ஆஸ்டர் யூனிட்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. எனினும், இவை அடுத்த ஆண்டு தான் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News