கார்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வால்வோ XC40 பேஸ்லிப்ட் அறிமுகம்

Update: 2022-09-22 09:19 GMT
  • வால்வோ நிறுவனத்தின் XC40 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • இந்த எஸ்யுவி 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

வால்வோ கார்ஸ் இந்தியா பேஸ்லிப்ட் செய்யப்பட்ட XC40 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 43 லட்சம் 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் B4 அல்டிமேட் எனும் பெயரில் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.


புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் ஆர் டிசைன் செய்யப்பட்ட கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் 5-ஸ்போக் சில்வர், அலாய் வீல்கள், பிளாக் ஸ்கிட் பிளேட்கள், ORVM-கள், ரூப் ரெயில்கள் மற்றும் இண்டகிரேடெட் பாக்ஸ் டெயில் பைப் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி க்ரிஸ்டல் வைட், ஜார்ட் புளூ, பியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

Tags:    

Similar News