கார்
null

738 கி.மீ. ரேன்ஜ்.. ஏகப்பட்ட ஆடம்பர வசதிகள்.. அசத்தலாக அறிமுகமானது வால்வோ EM90

Published On 2023-11-14 08:22 GMT   |   Update On 2023-11-14 08:22 GMT
  • வால்வோ EM90 மாடலில் 116 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும்.

ஸ்வீடனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் வால்வோ தனது முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. வால்வோ EM90 என்று அழைக்கப்படும் புதிய எம்.பி.வி. மாடல் முதற்கட்டமாக சீன சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யான EX90-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

வால்வோ EM90 மாடலின் முன்புறம் க்லோஸ்டு கிரில், இலுமினேட் செய்யப்பட்ட லோகோ, சிக்னேச்சர் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பெட்டி வடிவிலான எம்.பி.வி. தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் இரண்டாம் அடுக்கு இருக்கைகளுக்கு ஸ்லைடிங் வகையிலான கதவுகள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் பிளாக்டு அவுட் பில்லர்கள், 20 இன்ச் அலாய் வீல்கள், பின்புறத்தில் செங்குத்தான எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, பெரிய விண்ட் ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடல் 5206mm நீளம், 2024mm அகலம், 1859mm உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 3205mm அளவில் உள்ளது.

வால்வோ EM90 எம்.பி.வி. மாடலின் உள்புறத்தில் 15.4 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன், 15.6 இன்ச் ஸ்கிரீன் ஒன்று ரூஃப் பகுதியில் மவுன்ட் செய்யப்பட்டு இருக்கிறது. தேவைப்படும் போது இந்த ஸ்கிரீனை கீழே இறக்கிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீனுடன் கேமராவும் வழங்கப்படுகிறது. இத்துடன் போயெர் மற்றும் வில்கின்ஸ்-இன் 21 ஸ்பீக்கர்கள் அடங்கிய மியூசிக் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஜெகர் (Zeekr) 09 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் EM90 எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடலில் 116 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 268 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும். இதனை முழு சார்ஜ் செய்தால் 738 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். 

Tags:    

Similar News