கார்

விரைவில் இந்தியா வரும் புது ஹைரைடர் மாடல் - ஸ்டைலிஷ் டீசர் வெளியிட்ட டொயோட்டா!

Published On 2022-06-27 06:14 GMT   |   Update On 2022-06-27 06:14 GMT
  • டொயோட்டா நிறுவனம் விரைவில் புது ஹைரைடர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த மாடல் டொயோட்டா நிறுவனத்தின் ஹைப்ரிட் எஸ்.யு.வி. ஆகும்.

டொயோட்டா நிறுவனம் புதிய ஹைப்ரிட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் ஹைரைடர் என அழைக்கப்படுகிறது. புதிய டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் மாடல் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புது கார் மட்டுமின்றி அதற்கான டீசரையும் டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி காரின் முன்புறம் தெளிவாக காட்சி அளிக்கிறது. அதன்படி டொயோட்டா ஹைரைடர் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன் வழங்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்படும் பல்வேறு கார் மாடல்களில் இது வழக்கமான அம்சமாக மாறி விட்டது. இத்துடன் எல்.இ.டி. டே டைம் ரன்னிங் லைட்கள் கிரிலின் மேல்புறத்தில் உள்ளது.


டொயோட்டா ஹைரைடர் மாடலின் ஹெட்லேம்ப், முன்புற பம்ப்பரின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட் மற்றும் செண்ட்ரல் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கார் டூயல் டோன் பெயிண்ட் ஃபினிஷ்-இல் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

புதிய டொயோட்டா கார் பெங்களூரு ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மேலும் இதே காரின் சுசுகி பிராண்டிங் கொண்ட வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது. டொயோட்டா ஹைரைடர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படலாம். 

Tags:    

Similar News