கார்

விரைவில் இந்தியா வரும் டொயோட்டா கிளான்சா CNG

Update: 2022-09-19 10:08 GMT
  • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய CNG காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் ஆகும்.

டொயோட்டா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் கிளான்சா மாடலின் CNG வேரியண்டை உருவாக்கி வருவகிறது. இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா மாடல் டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

புதிய கிளான்சா CNG மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 77 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் கிலான்சா ஸ்டாண்டர்டு மாடலில் இதே என்ஜின் 90 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. டொயோட்டா தனது கிளான்சா மாடல் லிட்ருக்கு 25 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. மேலும் இந்த வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.


டொயோட்டா கிளான்சா CNG ஆப்ஷன் G, S மற்றும் V வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. டாப் எண்ட் மாடலான V வேரியண்டில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 9 இன்ச் தொடுதிரை வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஆறு ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மற்ற CNG கார்களை போன்றே கிளான்சா CNG விலை அதன் பெட்ரோல் மாடலை விட அதிகமாகவே இருக்கும். தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா கிளான்சா CNG விலை அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 75 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News