கார்

டாடா சபாரி புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Update: 2022-09-27 10:31 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
  • இந்த வரிசையில் டாடா சபாரி புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சபாரி XMS மற்றும் XMAS புது வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 17 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டாடா சபாரி புது வேரியண்ட்கள் XM மற்றும் XT வேரியண்ட்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

XM வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது டாடா சபாரி XMS மற்றும் XMAS வேரியண்ட்களில் கூடுதலாக பானரோமிக் சன்ரூப், டிரைவ் மோட்கள் (இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்), 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நான்கு ஸ்பீக்கர்கள், நான்கு ட்வீட்டர்கள், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், ஆட்டோ ஹெட்லேம்ப், எலெக்ட்ரிக் போல்டபில் ORVM-கள் வழங்கப்பட்டு உள்ளன.

புதிய டாடா சபாரி மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக டாடா ஹேரியர் XMS வேரியண்டை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இதன் விலை ரூ. 17 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News