கார்

புதிய அலாய் வீல்களுடன் டெஸ்டிங் செய்யப்படும் டாடா சஃபாரி பேஸ்லிஃப்ட்

Published On 2023-06-30 11:48 IST   |   Update On 2023-06-30 11:48:00 IST
  • புதிய டாடா சஃபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்களை காட்சிப்படுத்தியது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் எஸ்யுவி டாடா சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடல் இடம்பெற்று இருக்கிறது. புதிய சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடலுக்கான டெஸ்டிங் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், புதிய டாடா சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் புதிய காரின் விவரங்கள் வெளியாகி உள்ளது. டாடா சஃபாரி பேஸ்லிஃப்ட் மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்-இல் டூயல் டோன் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

 

இதன் வெளிப்புற பம்ப்பரில் மவுன்ட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், மெல்லிய கிரில் வழங்கப்படுகிறது. இதன் ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள் காருக்கு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று தெரிகிறது. முன்னதாக சஃபாரி மாடல் ஏராளமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ADAS வழங்கப்படுகிறது.

புதிய டாடா சஃபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்களை காட்சிப்படுத்தி இருந்தது. இவை 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் எஸ்யுவி-க்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: carwale 

Tags:    

Similar News