- ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா நிறுவனம் ஹேரியர் EV கான்செப்ட்-ஐ காட்சிக்கு வைத்தது.
- சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கிரில் அப்ரைட் தோற்றம், புதிய பம்ப்பர் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்பட்ட சஃபாரி மாடலை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், சஃபாரி மாடலுக்கு மற்றொரு மிட்-சைக்கிள் அப்டேட் வழங்க டாடா மோட்டார்ஸ் தயாராகி வருவதாக தெரிகிறது. புதிய சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களில் இந்த காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் பற்றி தெரியவந்துள்ளது. டெஸ்டிங் செய்யப்படும் யூனிட் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கிரில் அப்ரைட் தோற்றம், புதிய பம்ப்பர் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. புதிய பம்ப்பர் ஹேரியர் EV கான்செப்டில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
Photo Courtesy: Drivespark
ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் EV மாடலை கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைத்தது. இதில் மெல்லிய எல்இடி லைட் கிளஸ்டர்கள் வழங்கப்படுகின்றன. பம்ப்பரின் கீழ்புறம் லோயர் ஏர் வெண்ட்களும் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டு பகுதிகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
காரின் உள்புறத்தில் ரிவைஸ்டு இருக்கை மேற்கவர்கள், புதிய ட்ரிம் இன்சர்ட்கள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான மற்ற ஸ்பை படங்களில் இந்த காரின் கேபின் அளவில் பெரியதாக இருக்காது என்று தெரியவந்தது.