ஜூன் விற்பனையில் அசத்திய டாடா மோட்டார்ஸ்
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளது.
- டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 1 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் 2023 மாதத்தில் மட்டும் 47 ஆயிரத்து 235 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45 ஆயிரத்து 197 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
அதன்படி கடந்த மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் ஐந்து சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 245 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 248 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. உள்நாட்டில் மட்டும் 80 ஆயிரத்து 383 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 1 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 79 ஆயிரத்து 606 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 2023 மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 47 ஆயிரத்து 235 யூனிட்களும், கடந்த ஆண்டு இதே மாதம் 45 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதில் டாடா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 5 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
"2024 முதல் காலாண்டில் பயணிகள் வாகன துறையில் எஸ்யுவி மற்றும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் புதிய வாகனங்கள் அமோக வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காலாண்டில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 450 யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகம் ஆகும்," என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.