கார்

நெக்சான் மற்றும் டியாகோ EV விலையை திடீரென மாற்றிய டாடா மோட்டார்ஸ்

Published On 2023-02-10 16:28 IST   |   Update On 2023-02-10 16:28:00 IST
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரு கார்களின் விலையை மாற்றி இருக்கிறது.
  • டியாகோ EV அனைத்து வேரியண்ட்களுக்கும் புதிய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களுக்கு பொருந்தும். இந்த முறை நெக்சான் விலை ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக நெக்சான் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருக்கிறது.

விலை உயர்வின் படி டாடா நெக்சான் புதிய விலை ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 95 ஆயிரம் என மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மொத்தத்தில் 25-க்கும் அதிக வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த முறை நெக்சான் மாடல் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

நெக்சான் மாடலை தொடர்ந்து டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வின் படி டாடா டியாகோ EV விலை தற்போது ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என மாறி இருக்கிறது.

டியாகோ EV புதிய விலை விவரங்கள்:

டாடா டியாகோ EV XE 19.2kWh 3.3KW AC ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம்

டாடா டியாகோ EV XT 19.2kWh 3.3KW AC ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம்

டாடா டியாகோ EV XT 24kWh 3.3KW AC ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம்

டாடா டியாகோ EV XZ+ 24kWh 3.3KW AC ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம்

டாடா டியாகோ EV XZ+ Tech Lux 24kWh 3.3KW AC ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம்

டாடா டியாகோ EV XZ+ 24kWh 7.2KW AC ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம்

டாடா டியாகோ EV XZ+ Tech Lux 24kWh 7.2KW AC ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ EV மாடல் அறிமுக சலுகையாக ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 79 ஆயிரம் ஆகும். இது இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். 

Tags:    

Similar News