லெவல் 2 ADAS உடன் நெக்சான் டார்க் எடிஷன்... என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா..?
- இந்த யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வசதியுடன் வருகிறது.
- சி.என்.ஜி. வேரியண்டும் கிடைக்கிறது.
டாடா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட நெக்சான் டார்க் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 5,500 ஆர்.பி.எம்.மில் 118 பி.எச்.பி பவரையும், 1,750 ஆர்.பி.எம்.மில் 170 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்ட் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வசதியுடன் வருகிறது. இதுதவிர சி.என்.ஜி. வேரியண்டும் கிடைக்கிறது. இந்த காரில் டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன், சன்ரூப், எல்.இ.டி. லைட் மற்றும் லெவல் 2 ADAS பேக்கேஜ் உள்ளது.
புதிய நெக்சான் டார்க் எடிஷன் என்ட்ரி லெவல் வேரியண்டான பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ.12.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ADAS உடன் கூடிய பெட்ரோல் டூயல் கிளட்ச் வேரியண்ட் விலை சுமார் ரூ.13.81 லட்சம். (எக்ஸ்-ஷோரூம்), சி.என்.ஜி. சுமார் ரூ.13.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), டீசல் ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.14.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.